திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறு சீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று வாணியம்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்து கட்சி கூட்டம் உங்களுக்கு தேவை என்றால் அழைப்பீர்கள் நாங்கள் வர வேண்டுமா. இத்தனை ஆண்டுகள் நடந்த கூட்டத்திற்கு ஏன் எங்களை கூப்பிடவில்லை? அதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனியாக போராடுவோம். இவர்களை நம்பவே முடியாது. பருவ கால வியாபாரம் போல எலெக்க்ஷன் பிசினஸ் செய்வார்கள்.

இப்போதுதான் மும்மொழி கொள்கை வருகின்றதா? இந்தி திணிப்புக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இந்தியை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். தமிழர்கள் தாய்மொழி மீது உள்ள பற்றால் தன் எழுச்சியாக போராடினார்கள். இன்று தேர்தல் வருவதால் பேசுகின்றனர். பெரியாருக்கு என்ன கொள்கை உள்ளது? பெரியார் எங்களுக்கு நேர் எதிரான கருத்தியல் கொண்டவர். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் பெரியாரை இழிவாக பேசுகிறோம் என்று சொல்கிறார்கள். பெரியார் பேசியதை தான் நாங்கள் எடுத்துப் பேசுகிறோம். எங்களுக்கு பல்லாயிரம் பெரியார்கள் உள்ளனர். சொந்த பெரியார் ஆயிரம் இருக்கும் போது எங்கிருந்தோ வந்த பெரியார் எங்களுக்கு தேவை இல்லை என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.