
இந்தியாவின் தற்போது ஆன்லைனில் பணம் செலுத்தும் நிறுவனங்களில் முன்னணியில் போன் பே நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது வரி செலுத்துவோருக்கு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி தொலைபேசி மூலமாக வரி செலுத்த முடியும். இந்த சேவை போன் பே மற்றும் டிஜிட்டல் B2B கட்டணங்கள் மற்றும் சேவை வழங்குனரான paymate ஆகியவற்றுக்கு இடையே உள்ள கூட்டுப் பணியாகும்.
கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ மூலமாக போன் பே செயலியில் வருமானவரி பரிவர்த்தனைகள் செய்யலாம். இந்த புதிய அம்சம் தற்போது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்தி வரி செலுத்தினால் 45 நாட்கள் வட்டியில்லா கால அவகாசம் மற்றும் வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி செலுத்தும் வசதி மட்டுமே இந்த அம்சத்தில் உள்ளது. ஐடியா தாக்கல் செய்ய பயனர்கள் வழக்கமான நடைமுறையை தான் பின்பற்ற வேண்டும். மேலும் பயன்பாட்டின் முகப்பு வருமான வரி ஐகானுடன் வருமானவரி செலுத்துவதற்கான ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.