
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் ஏராளமானவர்கள் மெட்ரோவில் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர் .
இந்த நிலையில் Paytm செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுன்பதிவு மூலம் 6 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யலாம். Paytm Wallet, Paytm UPI, Paytm UPI Lite, Paytm Postpaid, net-banking or cards போன்ற கட்டண விருப்பங்களை Paytm app தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பதிவு செய்யும் டிக்கெட்டுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.