
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆதாரில் பதிவு செய்யலாம். இதற்கு பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
கைரேகை பதிவு ஐந்து வயதிலும் 15 வயதிலும் கட்டாயமாக புதுப்பிக்கப்பட வேண்டும். கைரேகை கட்டாயமாக புதுப்பிப்பது குழந்தைகளின் ஆதாரை தெளிவுபடுத்தும். புதுப்பிக்கப்படாத ஆதார் செல்லாததாகிவிடும். உதவித்தொகை, ரேஷன் கார்டு, பள்ளி கல்லூரி சேர்க்கை, டி என் பி எஸ் சி தேர்வுகள், டிஜி லாக்கர் மற்றும் பான் கார்டு ஆகியவற்றுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.