பாகிஸ்தானில் வைத்து வெஸ்ட் இண்டீஸ்க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷான் மசூத்திடம் “தாமாகவே கேப்டன் பதவியில் இருந்து விலகுவீர்களா அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்குமா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்க விரும்பாத ஷான் மசூத் அடுத்த கேள்விக்கு சென்றார். ஆனால் அந்த பத்திரிக்கையாளர் மீண்டும் அதே கேள்வியை கேட்டார். இதனால் கோபமடைந்த ஷான் மசூத் “உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் உங்கள் கேள்வியில் அவமரியாதை இருக்கிறது. எங்கள் வீரர்களையும் என்னையும் உங்களால் அவமதிக்க முடியாது.

நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம், இது போன்ற அவமரியாதைகளை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் வீரர்கள் ஏற்றுக்கொண்டு நடப்பார்கள். சொந்த மண்ணில் இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்” என கோபத்துடன் கூறியுள்ளார்.