
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் இதுவரை வெற்றிதான். இவர் தற்போது பேட் கேர்ள் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ள நிலையில் நடிகை அஞ்சலி சிவராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு பள்ளியில் படிக்கும் பெண் ஆண்களுடன் டேட்டிங் செல்ல நினைப்பது மற்றும் பழக நினைப்பது அதனால் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் போன்றவைகள் இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்குனர் வெற்றி மாறனை கடுமையாக விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை இதுபோன்று சித்தரிப்பது அந்த குலத்தையே அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. இதை தவிர அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். பிராமண பெண்களின் அம்மா அப்பா தலைவர்கள் கிடையாது அவர்கள் இந்த காலகட்டத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள், அவ்வளவுதான். இதை பிராமண பெண்களிடம் முயற்சி செய்யாமல் உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் முயற்சி செய்யுங்கள். முதலில் உங்க சொந்த குடும்பத்திற்கு இதனை வெளிப்படுத்துங்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் என்னுடைய பதிவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது