இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் மீது 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இதை மீறி சிலர் 10 சிம்கார்டுகளுக்கும் மேல் தங்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் ஒரு தனிநபர் தன்னுடைய பெயரில் 10 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அவருக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படும்.

அதன்படி குற்றம் ஒரு முறை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை அவர் மறுபடியும் செய்தால், அவருக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒரு தனிநபர் 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை தன் பெயரில் வைத்திருந்தால் அவருக்கு 3 வருடங்கள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.