கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. இந்த சூழலில் கடந்த போட்டியில் ஆல்ரவுண்டாக ஹர்திக் பாண்டியா, பும்ரா விளையாட முடியாத நிலையில் அவர்களுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சில போட்டிகள் விளையாடி உள்ள அர்ஜுன் டெண்டுல்கர் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக புதிய பந்து  வீச்சாளர் சத்யநாராயணன் வாய்ப்பு பெற்றார்.  ஓரளவு திறமை இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்தால் தான் அவர் சர்வதேச அளவில் திறமை பெற முடியும் என்று கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இதுகுறித்து பேசுகையில், “அர்ஜுன் டெண்டுல்கர் என்னிடம் வந்தால் அவரை ஆறு மாதத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக மாற்றிக் காட்டுவேன். அவருக்கு பேட்டிங் திறமை நிறையவே இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அவர் என்னிடம் 12 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்றார். அதன் பிறகு ரஞ்சிக் கோப்பையில் விளையாடி சதம் அடித்தார். அப்போது நல்ல பேட்ஸ்மேனாக வருவதற்கு திறமை இருக்கும்  பையனை ஏன் வேகப்பந்து பேச்சாளராக வைத்து அவருடைய திறமையை வீணடிக்கிறீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகனின் திறமையை வீணடிக்கிறார். அவரால் சிறந்த பேட்டிங் ஆல் ரவுண்டராக வர முடியும்” என்று பேசியுள்ளார்.