உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாலதி வர்மா என்ற 58 வயதான அரசு பள்ளி ஆசிரியருக்கு வாட்ஸ்அப் மூலம் மோசடி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், மாலதியின் மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக பொய் கூறி, வழக்கு தவிர்க்க ரூ.1 லட்சம் பணம் கேட்டனர். அந்த அழைப்பின் ப்ரொபைல் படத்தில் போலீஸ்  உடை அணிந்தவரின் புகைப்படம் இருந்ததால், மாலதி உண்மையாக நம்பினார்.

அதைத் தொடர்ந்து, பதற்றமடைந்த மாலதி தன்னுடைய மகளுக்கு தொடர்பு கொண்டு, வாட்ஸ்அப் எண்ணை கூறியபோது, மகள் அந்த எண்ணின் +92 எனத் தொடங்கியதனால், அது போலி அழைப்பு என்று உறுதிப்படுத்தினார். மேலும், தனது சகோதரியை கல்லூரியில் பாதுகாப்பாக இருப்பதை மகள் உறுதிபடுத்தியபோது தான், மாலதி சற்றே நிம்மதியானார்.

ஆனால், இந்த மோசடி அழைப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் அவரை விட்டு விலகவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் நெஞ்சு வலியால் மாலதி மரணமடைந்தார். இந்தச் சம்பவம் அவரின் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியது.

மாலதியின் குடும்பம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

उत्तर प्रदेश के जिला आगरा में साइबर अपराधियों ने एक महिला टीचर की जान ले ली। उन्होंने कॉल करके कहा कि आपकी बेटी सेक्स रैकेट में पकड़ी गई है। मालती वर्मा ये बात बर्दाश्त नहीं कर पाईं और हार्टअटैक से मौत हो गई। @madanjournalist pic.twitter.com/J9dpYFoAqC

— Sachin Gupta (@SachinGuptaUP) October 3, 2024

“>