100% பேட்டரி பேட்டரி சார்ஜ் செய்தாலும் படிப்படியாக குறைந்து சீக்கிரம் ஆப் ஆகும் நிலை ஏற்பட்டால் நாம் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இதில் பார்க்கலாம். ஸ்மார்ட் போனை சார்ஜ் போடும்போது அதன் பேக்கேஸை கழற்றி விட்டு போட வேண்டும். ஏனென்றால் சார்ஜ் செய்யும்போது உங்களுடைய பேட்டரி வெப்பமடைந்து அந்த வெப்பத்தை வெளியேற விடாமல் குறித்த கேஸ் தடுக்கின்றது.

இதனால் பேட்டரி சேர்ந்தமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. சார்ஜ் போடும் போது பிளக்கை சரியான முறையில் கனெக்ட் செய்வது அவசியமாகும். ஏனென்றால் பேட்டரிக்கு பவர் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மின்சாரம் வந்தால் பேட்டரி பழுதடைந்து விடும். இரவு முழுவதும் போனை சார்ஜ் போடும் வழக்கம் இருந்தால் அதனை நிறுத்தி விடுங்கள். அப்படி செய்தால் பேட்டரி விரைவில் பழுதடைந்து விடும். 70,80 சதவீதம் சார்ஜ் இருக்கும்போது சார்ஜ் போடுவதை தவிர்த்து 15,20 சதவீதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது சிறந்ததாகும்.