முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது  ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி ரூ.50 தொடங்கி ரூ.600 வரை உயர்த்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நினையில் அம்பானி மகனின் திருமணம் ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்பே பலமுறை  திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக அம்பானி நடத்தினார். இதை மேற்கோள் காட்டிய இணையவாசிகள், உங்கள் மகன் திருமண செலவுகளை எங்கள் தலையில் கட்டுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.