உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட அந்த 35 வயது பெண் பள்ளியில் தன்னுடைய மகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பேது தங்களை ராணுவ வீரர்கள் என்று கூறிய 2 பேர் அந்தப் பெண்ணை நம்ப வைத்து மிலிட்டரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது மிலிட்டரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக ஒரு ஹோட்டலுக்கு கடந்த வியாழக்கிழமை அழைத்து சென்று அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைப் பற்றி வெளியே சொன்னால் உன் மகளுக்கு தீங்கு விளைவிப்போம் என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை அடையாளம் கண்டு தற்போது பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.