
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா? எத்தனை பேர் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதற்காக, https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களது வாக்குச்சாவடிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களது வாக்குச்சாவடி நிலவரத்தை அறிந்துகொள்ளலாம்.