சேலம் மேற்கு தொகுதி பாமக கட்சி எம்எல்ஏ அருள். இவர் பெண்களிடம் உங்க வீட்டில் ஆம்பளையே இல்லையா என்று கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் நேற்று ஒரு கோவிலை திறந்து வைத்து பூஜை நடத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த சென்றார். அப்போது ஒரு தரப்பிலிருந்து ஆண்கள் மற்றும் மற்றொரு தரப்பிலிருந்து பெண்கள் மட்டுமே வந்துள்ளனர். இது எம்எல்ஏ அருளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த பெண்களைப் பார்த்து உங்கள் வீட்டில் ஆம்பளையே இல்லையா நீங்க ஏன் வந்து இருக்கீங்க என்று கேட்டுள்ளார். இதுனால அந்த பெண்கள் வரைபடுத்து கையெடுத்து கும்பிட்ட நிலையில் இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவிக்க எம்எல்ஏ அருள் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அந்த பகுதியில் உள்ள கோவிலை திறக்க வேண்டும் என்று பெண்கள் என் காலில் விழுந்து கண்ணீர் வடித்தனர். ஆனால் கோவில் சாவி என்னிடம் இல்லை எனவும் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் கோவிலை திறக்க முடியும் என்று தான் அவர்களிடம் கூறியதாகவும் ஆனால் சில விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை எம்எல்ஏ என்ற முறையில் சரி செய்து விரைவில் கோவிலை திறக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.