
பொதுவாகவே வீடுகளில் கொசு தொல்லை என்பது அதிகமாக இருக்கும். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுகிறது. அதனால் வீடுகளிலும் சரி வீட்டிற்கு வெளிப்புறங்களிலும் கொசுக்கள் அண்டாமல் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது. வீட்டில் உள்ள கொசு தொல்லையை போக்க இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகின்றது. இதனை வேறு ஏதாவது கேரியர் எண்ணெயுடன் கலந்து நமது சருமத்தில் பூசினால் கொசு நம் பக்கமே வராது.
மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலமாக வெளிவரக்கூடிய புகையானது ஈக்கள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டும்.
சிட்ரோனேல்லா எண்ணெயை நமது சருமத்தில் நேரடியாக தடவுவதும் கொசுக்களை விரட்டுவதற்கு பயன் தரும்.
சாம்பிராணியை பயன்படுத்துவது பூச்சிகள் மற்றும் கொசுக்களை ஓட ஓட விரட்ட கை கொடுக்கும்.