பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பபூர் மாவட்டத்தில் மினாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிதிஷ்குமார் என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் காலில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு அட்டைப்பெட்டியால் காலில் கட்டு போட்டுள்ளனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 5 நாட்களாகியும் எந்தவித சிகிச்சையும் வழங்கவில்லை. இது தொடர்பாக சஞ்சீவ் என்பவர் வீடியோ எடுத்து பிரதமரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நிலையில் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.