திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு அருகே மாதர் பாக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் தற்போது சூர்யா (25), சுரேந்தர் (21), ஜெயக்குமார் (24) ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட இளம் பெண் சம்பவ நாளில் சாலையில்  நடந்து சென்றுள்ளார்.

அந்த பெண்ணை 3 வாலிபர்களும் பின்தொடர்ந்து சென்று ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்த பெண்ணை தாக்கி தரதரவென வயல்வெளிக்குள் இழுத்துச் சென்று 3 பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் அடையாளத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணிறி வருகிறார்கள்.