மதுரையை சேர்ந்த மஞ்சுளா தனது  கணவர் துவாரகாந்த்துடன், தீபாவளி பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி பகுதியில் பொருட்கள் வாங்கி, இரவு நேரத்தில் வீடு திரும்பிய போது, இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பிடித்து இழுத்தனர். மஞ்சுளா தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டார்.

ஆனாலும் விடாமல் சுமார் 10 மீட்டர் தூரம் தரதரவென மஞ்சுளாவை இழுத்து சென்று மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.  இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. படுகாயமடைந்த மஞ்சுளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.