
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழரசன்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் புவனேஸ்வரிக்கு(20) ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சபரி(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சபரியும், புவனேஸ்வரியும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் புவனேஸ்வரியின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு புவனேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக புவனேஸ்வரியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சபரியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.