
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அரை நிர்வாணத்துடன் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் கொட்டியது. அதோடு உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது அந்தப் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பிறகுதான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று இந்த வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரிக்கும் நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பொது நல வழக்குகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மருத்துவ அமைப்பினருடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடையாவிட்டால் சிபிஐக்கு மாற்றுவதாக முதல்வர் மம்தா பானர்ஜியும் உறுதி கொடுத்துள்ளார்.