திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்‌. இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே வாலிபரிடம் பேசுவதை அவர் நிறுத்திவிட்டார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து அந்த சிறுமி வேறு ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சிறுமியை வெளியூரில் தங்கி படிக்க வைத்துள்ளனர். கடந்த பொங்கல் பண்டிகைக்கு சிறுமி ஊருக்கு வந்தபோது வேறொரு வாலிபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதமும் ஒரு வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் 1908 என்ற நபருக்கு தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறியுள்ளனர். அதன் பிறகு சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுமியை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெற்றிவேல் (22), லட்சுமணன் (23), மகேஸ்வரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாதேஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.