பீகார் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. அதாவது மதுபானி பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 75 மீட்டர் நீளமுடைய பாலம் ஒன்று சுமார் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு வந்தது.

அங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. இதனால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பாலம் தரைமட்டமானது. இதனை அதிகாரிகள் தார்பாய்கள் கொண்டு மூடி வைத்துள்ளனர். மேலும் கடந்த 9 நாட்களில் அடுத்தடுத்து பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.