
மத்திய பிரதேச மாநிலம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தைக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் குழந்தையானது அடிக்கடி அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவர்கள் அந்த கிராமத்தில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளார்கள். அவர் குழந்தையின் உடலுக்குள் ஆவி புகுந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன பெற்றோர்கள் அவர் சொன்னதை கேட்டுள்ளார்கள். அதாவது மந்திரவாதி இருந்த இடத்தில் செங்கல்களை அடுக்கி தீயை மூட்டி பின்னர் குழந்தையை தலைகீழாக கட்டி அந்த தீ குண்டத்திற்குள் நேராக தொங்கவிட்டுள்ளார் மந்திரவாதி. இதனால் குழந்தை வெப்பம் தாங்காமல் அலறியுள்ளது. இதனை அடுத்து அந்த குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.