
ஒடிசா மாநிலத்தில் உள்ள நவரங்கபூர் மாவட்டத்தில் ஹண்டல்படா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் ஒரு தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் குழந்தையின் உடம்பில் தீய சக்தி புகுந்து விட்டதாக பெற்றோர் நினைத்துள்ளனர். அவர்கள் உடல் நலம் சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மூடநம்பிக்கையின் காரணமாக சூடு போட்டுள்ளனர். அதன்படி தலை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 40 முறை இரும்பு கம்பியால் சூடு வைத்தனர்.
இதனால் குழந்தையின் உடல்நிலை மிக மோசம் அடைந்த நிலையில் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. குழந்தையின் உடம்பில் தீக்காயங்கள் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர் அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் குழந்தையின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.