
உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை உடல்நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார். ஆம்புலன்சில் வைத்து அந்த பெண்ணை இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அதோடு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்தப் பெண்ணின் கணவரையும் அவர்கள் சாலையில் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டனர்.
சித்தார்த் நகரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் வைத்து பார்க்க வசதி இல்லாமல் அவரது மனைவி வீட்டிற்க்கே கணவரை கூட்டி செல்லலாம் என்று ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவருடன் அவரது தம்பியும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஓட்டுநர் காவல் துறையினர் சோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணை முன்னால் அமரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒரு மனதாக அந்த பெண்ணும் சம்மதிக்க முன்னாள் அமர்ந்த பெண்ணை ஓட்டுனரும் ஆம்புலன்ஸ் உதவியாளரும் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் அந்த பெண் கூச்சலிட அவரது சகோதரன் உதவிக்காக சத்தமிட்டுள்ளார். இதனால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்திய ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் கணவரை சாலையில் தூக்கி வீசியதோடு அவரது சகோதரரையும் நடுவழியில் தள்ளிவிட்டு சென்று அந்த பெண்ணை ஆம்புலன்ஸில் வைத்தே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கணவரான ஹரிஷ் உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.