
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக வேலை பார்க்கிறார். இவருக்கு 48 வயது ஆகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலச்சந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.