புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஹேமசந்திரன். பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹேமசந்திரன் கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்தார். சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.

இச்சம்பவத்தை அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும், இது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த இருப்பதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தார்.