
ஏஐ தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வரும் நிலையில் அது மனிதர்களின் தனிப்பட்ட வேலைகளிலும் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை காண முடிகிறது. இந்த ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது செக்ஸ் பொம்மைகள் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்த பொம்மைகளை மற்றவர்களிடம் பேச வைக்கவும் அவர்களுடன் உரையாடவும் ஏஐ தொழில்நுட்பத்தை சீன நாட்டினர் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளனர். அதாவது சீன விஞ்ஞானிகள் இதற்காக chatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பயனர்களிடம் பேசுவது மட்டுமில்லாமல் உடல் ரீதியான தொடர்பு வைக்கவும் செகஸ் பொம்மைகள் பயன்படுத்தப்படும். மேலும் ஆண் மற்றும் பெண் வடிவில் இருக்கும் இந்த பொம்மைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.