உணவில் குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய அவர், நாள்தோறும் உண்ணும் உணவில் 8 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை மாற்றுவதற்கு முதலில் கடினமாகத்தான் இருக்கும் என்றார். மேலும், இதை நாம் கடைப்பிடித்தால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.