பூமியில் இருந்து மனிதர்கள் அழிந்த பிறகும் வாழும் ஒரு விசித்திர உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சூரியன் அழிந்தாலும் இந்த உயிரினம் அழியாதாம். இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மிகச் சிறந்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிலத்தில் வாழும் உயிரினங்களை காட்டிலும் நீரில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.  முற்றிலும் மாறுபட்ட விசித்திரமான விலங்கு இந்த டார்டிகிரேட். காட்டுப்பகுதியில் வாழும் கரடி போல தோற்றமளிக்கும். இது நீர்க்கரடி என்றழைக்கப்படுகிறது. இது கடலுக்கடியில் வாழ்கிறது.

இது மாறுபட்ட தோற்றத்தோடு உள்ளது. வெற்று கண்ணால் பார்க்க முடியாது. 32 டிகிரி வெப்பம் மற்றும் மைனஸ் 452  டிகிரி குளிரிலும் வாழும் ஆற்றல் கொண்டது. பூமியில் மனிதர்கள் முற்றிலும் அழிந்த பிறகும் கூட இந்த உயிரினம் வாழும். சூரியனின் வெப்பத்தை இழந்து இருளில் மூழ்கும் காலம் வரையிலும் இது நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. உணவு, தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் இதனால் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. இதனை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்தாலும், பனியில் உறைய  வைத்தாலும் கொல்ல முடியாது. இதனுடைய ஆயுள் காலம் சுமார் 200 ஆண்டுகள்.