
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். அடிக்கடி ராக்கி சாவந்த் செய்யும் விஷயங்களால் சமூக வலைதளங்களில் பிரபலமாவார். குறிப்பாக அவர் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார். அதாவது மும்பையில் பிறந்து வளர்ந்த ராக்கி சாவந்த் ஒரு கேட்டரிங் சென்டரில் வேலை பார்த்துள்ளார். அதற்கு ஒரு நாளைக்கு ரூ.50 சம்பளமாக கிடைத்துள்ளது.
சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் கால்பதித்தார். ஆனால் அவர் நிறம் குறைவாக இருந்ததால் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் உடல் மற்றும் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அக்னிசக்ரா என்ற படத்தின் மூலம் முதலில் அவர் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில் தொடர்ந்து படங்களில் நடனம் ஆடுவது மற்றும் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.