
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, 500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது. அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே, அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன. உண்மை தெரியாமல் அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை விடுவதா? நிதிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் குழந்தையை தத்துக்கொடுக்கவோ, தாரைவார்க்கவோ அவசியம் இல்லை என கூறியுள்ளார்.