
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக படிக்கப்பட்டது. இதற்கு தற்போது பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து திமுக அரசை கடுமையாக சாடி வருகிறது. மத்திய மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக எச் ராஜா ஆகியோர் விமர்சித்திருந்த நிலையில் தற்போது எம்எல்ஏ வானதி சீனிவாசனும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா உதயநிதி அவர்களே. நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடியுள்ளது. இதனை உறுதி செய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது.
இதுதான் எங்கள் தமிழ் மொழியை கட்டி காக்கும் லட்சணமா.? நீங்கள் செய்த தவறு காணொளியில் தெளிவாக காட்டும் பொழுது டெக்னிக்கல் ஃபால்ட் என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்க முடியும். தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டபோது இனவெறி சாயத்தை பூசிய உங்களுடைய தகப்பனார் தற்போது உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார். ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக ஒளிபரப்பப்பட்டதற்காக அவருடைய பதவியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே. தற்போது உங்கள் பதவி பறிக்கப்படுமா. என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.