அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டுமென்று சமீப காலமாக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளதே? என்ற கேள்விக்கு, வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.