எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பெய்த மழையில் முளைத்த விஷ காளான் உதயநிதி என்ற விமர்சித்து இருந்தார். அதன் பிறகு அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவை புகழ்ந்து பேசுகிறார். செல்வ செழிப்பில் பிறந்த உங்களுக்கே இவ்வளவு திமிர் இருக்கிறது என்றால், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று கூறினார்.

அதன் பிறகு ரெய்டை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை என்றும் எதையும் எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவுக்கு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் முன்னதாக இன்னும் ஒரு ரெய்டு மட்டும் நடந்தால் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி யோசிக்காமல் சென்று பாஜகவுடன் இணைத்து விடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி இப்படி கூறியுள்ளார்.