
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்போதும் டி-ஷர்ட் அணிவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு என ஒரு ஆடை கட்டுப்பாடு இருப்பதாகவும் வெள்ளை நிற வேஷ்டி சட்டை அல்லது பேண்ட் சட்டை அணிவதுதான் முறையானது என்றும் கூறினார். அதோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது உதயநிதி ஸ்டாலின் டி-ஷர்ட் அணிய கூடாது எனவும் அவருக்கு தேவைப்பட்டால் அதிமுக சார்பில் நாங்கள் கூட வேஷ்டி சட்டை வாங்கி தருகிறோம் என்றும் கூறினார்.
அதோடு அதையும் மீறி உதயநிதி டி-ஷர்ட் அணிந்தால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்று கூறினார். இந்நிலையில் அதிமுக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டி-ஷர்ட் அணிவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் டீசர்ட் என்பது ஒரு கேஸ்வல் உடையா.? அரசு ஊழியர்களுக்கு இருக்கும் ஆடை கட்டுப்பாடு அரசியல் சட்டப் பதவிகளை வகிப்போருக்கு பொருந்தாதா?. என்ற கேள்வி எழுப்பியது. மேலும் இந்த டீசர்ட் விவகாரத்திற்கு ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.