கிருஷ்ணகிரி மாவட்டம் உன்னிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ரூபா(27). காய்கறி வியாபாரியான ஐயப்பனுக்கு மஞ்சுகிரி பகுதியைச் சேர்ந்த தங்க மணி(25) என்பவர் உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தங்கமணிக்கும் ரூபாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ஐயப்பன் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐயப்பன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ரூபாவும் தங்கமணியும் இணைந்து ஐயப்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு மதுபோதையில் அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரூபாவையும் தங்கமணியையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இந்த வழக்கினை சரித்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ரூபா, தங்கமணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.