உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில், “கற்றுப் பார்” என்ற பெயரில் ஒரு புதிய தொழில் கல்வித் திட்டம் அமலாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு  பக்கோடா சுடுவது, தேநீர் தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்டவற்றை கற்றுத் தர இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, பழரசம் தயாரிப்பது, விவசாயம் மற்றும் தச்சு உள்ளிட்ட தொழில்களும் கற்று கொடுக்க உள்ளார்கள். இதுவரை இந்த திட்டம் சுமார் 26 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.