மத்திய அரசு ஊழியர் இறந்தால், அவரது மனைவிக்கு அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவது பொதுவான நடைமுறை. அவர்கள் கூட மரணம் அடைந்தால், தகுதியுள்ள பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால், இரண்டு மனைவிகளும் இருந்தால், ஓய்வூதியம் உரிமை குறித்து குழப்பம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு திருத்திய ஓய்வூதிய விதிகள், முதல் மனைவியை விட்டு, இரண்டாவது திருமணம் செய்யும் உரிமையை மறுக்கின்றன. திருமணச்சட்டப்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, இரண்டாம் திருமணம் செய்ய கூடாது என்பதும், இதை மீறுவோருக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்காது. மத்திய அரசு துறைகளுக்கு சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கையில், இரண்டு மனைவிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவது குறித்து, இரண்டாம் திருமணத்தின் சட்டபூர்வ நிலையை நன்கு ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.