குமரி மாவட்டம் அருகில் உள்ள தக்கலையில் வசித்து வரும் வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றார். பின்பு அந்த வாலிபர் தனது மனைவியை சமாதானப்படுத்த மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் ரயிலில் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் கண்விழித்து பார்த்தார்.

அப்போது மனைவியையும் குழந்தையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி மதுரைக்குச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவர் நாகர்கோயில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது, அருகே உள்ள வாலிபரை சந்தித்தார். அந்த வாலிபரும் பெண்ணிடம் நைசாக பேசியுள்ளார். அந்தப் பெண், கணவர் மீது உள்ள கோபத்தில் மதுரை செல்வதாக கூறியுள்ளார்.

பின் இருவரும் சேர்ந்து ஒன்றாக மதுரை சென்றுள்ளனர். பின் அந்த வாலிபர் பேச்சில் மயங்கிய அந்தப் பெண், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனால் அந்த பெண் வாலிபருடன் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணவர் இருக்கும் போது கள்ளக்காதலனுடன் செல்ல கூடாது என்று காவல் காவல்துறையினர் எச்சரித்தனர். அதற்கு அந்தப் பெண் குடிகாரனுடன் எப்படி வாழ முடியும் என்ற கேட்டுள்ளார். இருப்பினும் நாங்கள் கள்ள காதலுக்கு ஒத்துழைக்க முடியாது என்ற காவல்துறையினர்  கூறி அந்த பெண்ணை  பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.