
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேகா மிஸ்ரா என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இதில் நேகா கடந்த சில நாட்களாக தன்னுடைய தாயார் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் சம்பவ நாளில் நேகாவின் தாயார் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார். அப்போது நேகா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தாயார் கோவிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் தன் மகளின் நிலையை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக நேகாவின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி இரண்டு மாதம் ஆன நிலையில் திடீரென புது பெண் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.