கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூரில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த இளம்பெண்ணும் ஜெயலாபுதீன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி படிப்பு, வேலை என சென்றதால் இருவருக்கும் இடையே தொடர்பு இல்லாமல் இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த பெண் மீண்டும் ஜெய்லாபுதீனை சந்தித்தார். பின்னர் தங்களது பள்ளி பருவ காதலை இருவரும் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை இளம்பெண்ணை கொச்சின், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு இளம்பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண் கட்டாயப்படுத்தியதால் ஜெய்லாபுதீன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.