ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிக்கோயில் பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக சுபஸ்ரீ என்ற பெண்ணுடன் பழகி அவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊட்டிக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் தருண் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் சுபஸ்ரீக்கு தற்போது தான் 19 வயது ஆகிறது.

அவருக்கு வேறொருவருடன் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த தருண்குமார் தொடர்ந்து சுபஸ்ரீயை தொடர்பு கொண்டு அவரை தனியாக சந்திக்க வேண்டும் என்று தொந்தரவு கொடுத்துள்ளார். இது சுபஸ்ரீக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் வாலிபரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி தருண்குமாரை சுபஸ்ரீ கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி செய்தார். மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுபஸ்ரீ உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.