இந்தோனேசியாவில் 61 வயதான ரூடி ஹெரு கொமாண்டோனோ என்பவர் தன்னுடைய காரில்   சென்றுள்ளார்.  அப்போது திடீரென்று கட்டி முடிக்கப்படாமல் இருந் மேம்பாலத்திலிருந்து தவறி 40 அடி உயரத்தில் கீழே கார் விழுந்துள்ளது. இந்த விபத்தானது கூகுள் மேப் வழிகாட்டலில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது அவர் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு செல்வதாக காரில் சென்றுள்ளார். ஆனால் ஜிபிஎஸ் வழிகாட்டல் தவறாக காட்டியுள்ளதால் தவறான பாதையில் சென்று இந்த விபத்து ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக அவரும், அவரோடு பயணித்தவரும் சிறிய காயங்களோடு உயிர் தப்பி உள்ளார்கள். இந்த சம்பவம் நடந்தது விடியோவாக பதிவாகியுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சாலையை முற்றிலுமாக மறைத்து எச்சரிக்கை பலகைகளை பொருத்தி உள்ளார்கள். காவல் துறையினர் இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் இது போன்ற அபாயகரமான இடங்களில் செல்ல வேண்டாம் என்றும் சரியான சாலைகள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள்.