உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 26 வயதான தினேஷ் என்ற இளைஞர், தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று தினேஷ் என்ற அஜய் பஜ்ரங்கி தன் மனைவிக்கு  வீடியோ கால் செய்தார். அப்போது கத்தியை எடுத்து தன்னைத் தானே குத்திக்கொண்டு உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினரின் கூற்றுப்படி, 2023 ஜூனில் திருமணமான தினேஷுக்கும் அவரது மனைவி ராதாவுக்கும் அடிக்கடி தகராறுகள் நடந்துள்ளன.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தினேஷுக்கும் ராதாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென தகராறு ஏற்பட்டதால் தினேஷை விட்டு பிரிந்த அவருடைய மனைவி ராதா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் ராதாவை தினேஷ் தன்னுடன் வாழ வருமாறு அழைத்த நிலையில் அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால் தினேஷ் தனிக்குடித்தினம் நடத்த முடிவு செய்து வாடகைக்கு வீடு எடுத்தார். அதாவது அவருடைய மனைவி கூறியதால் அவருடைய விருப்பத்திற்காக ஒரு வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்தனர். இருப்பினும் அவர்களுக்குள் தகராறு தொடர்ந்துள்ளது.

இதனால் சங்கீதா மீண்டும் தினேஷை பிரிந்து சென்றுவிட்டார். அப்போதுதான் தினேஷ் தன் மனைவிக்கு வீடியோ கால் செய்து கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தினேஷின் தாயார் கூறும்போது என்னுடைய மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராதிகா என் மகனை சரியாக கவனிக்கவில்லை. அடிக்கடி எங்கள் மகனை அவர் அடித்து தொந்தரவு செய்தார் என்றார். அதன் பிறகு தினேஷின் தாயார் ராம்பாபு இதைப் பற்றி கூறும் போது கடந்த 2-ம் தேதி ராதா எங்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகனை நான் ஜெயிலுக்கு அனுப்ப போகிறேன்.

அதற்குள் பார்த்துக்கோங்க என்று மிரட்டியதாக கூறியுள்ளார். மேலும் சம்பவ நாளில் தினேஷ் வீடியோ காலில் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த ராதிகா அலறிய நிலையில் பின்னர் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது தினேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.