
யானை கட்டப்பட்டிருக்கும் தொழுவதற்குள் சிறுவன் ஒருவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையோடு திரும்ப கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சீனாவின் ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு யானைகளை மக்கள் பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய செருப்பை யானை தொழுவத்திற்குள் தவர் விடுகிறான்.
அப்போது யானை அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லாததால் சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமாக மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது. சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டுள்ளான். புத்திசாலித்தனமும் கருணையும் மிகுந்த இந்த யானையின் செய்கை அங்கு நின்றவர்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram