திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவரின் மகன் நவீன்குமார் (17), செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வந்தார்.

சமீபமாக அவர் வகுப்புக்கு சரியாக செல்லவில்லை. இதனால் ஜெயலட்சுமி நவீன்குமாரை  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவீன்குமார், நேற்று தன் வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நவீன்குமாரை மீட்டு நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலையின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.