மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அவ்வையார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வசந்தகுமார்(18) 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்திய வசந்தகுமாரை அவரது தாய் கண்டித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வசந்தகுமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.