ஹரியானா மாநிலம் பரிதாபாத் என்ற பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அவரிடம் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார் அந்த காவலர். அப்பொழுது டிரைவர் குடிபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

போலீஸ் காரின் கதவில் தொடங்கியபடி சில மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த காரை மடக்கி பிடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்து பார்த்தவர்கள் கூறுகையில், ஆவணத்தை சரிபார்ப்பதற்காக காவலர் டிரைவரின் பக்கவாட்டில் உள்ள கதவு வழியாக கேட்ட போது திடீரென்று டிரைவர் போக்குவரத்து காவலரை இழுத்துச் சென்றார் என்று கூறினார்கள்.