கர்நாடகா மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கலபுஜே கிராமத்தை சேர்ந்த ஹேமந்த ஹரிஜன், நாகராஜா லங்கேரா ஆகிய இரண்டு சிறுவர்களும் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். ஆனால் இவர்கள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் குளத்திற்கு சென்று பார்த்தபோது சிறுவர்களின் ஆடை மட்டும் குளக்கரையில் இருந்துள்ளது.

இதனால் குளத்தில் சிறுவர்களை தேடிய போது இருவரின் சடலமும் மீட்கப்பட்டது. அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலத்தை உப்பில் புதைத்து வைத்தால் மீண்டும் உயிர் வந்து விடும் என சிலர் கூறியதை நம்பிய பெற்றோர் சிறுவர்கள் இருவரையும் உப்பு குவியலில் புதைத்து வைத்தனர்.

ஆனால் ஆறு மணி நேரம் ஆகியும் எந்த அசைவும் இல்லாததால் பெற்றோர் செய்வதறியாது கதறி அழுதனர். இது குறித்து அப்பகுதியில் இருந்த ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி பெற்றோரை சமாதானப்படுத்தி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.